|
கலைமணி
சனசமூக நிலையத்தின் கல்விக்கௌரவிப்பு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் போட்டிகள்
- 2008
போட்டிகளின் முடிவுகள் - 2008
காலம் : 11.05.2008 (ஞாயிற்றுக்கிழமை)
பாலர் கீழ் பிரிவு (3 வயது)
மனனம் : கொன்றை வேந்தன் 13 வரிகள்
பேச்சு : நம்மூர் பெரியார் அருளம்பல சுவாமிகள் அல்லது எனது அன்னை (2-3 நிமிடம்)
பாலர் மேற்பிரிவு
மனனம் : திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் - முதல் 5 குறள்கள்
பேச்சு : நம்மூர் பெரியார் அருளம்பல சுவாமிகள் அல்லது ஒளவையார்
(2-3 நிமிடம்)
தரம் 1 பிரிவு
மனனம் : ஆத்திசூடி - முதல் 30 வரிகள்
பேச்சு : பாரதியார் (2-3 நிமிடம்)
தரம் 2 பிரிவு
மனனம் : திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம்;
பேச்சு : நான் அறிந்த பெரியார் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை அல்லது
தமிழிற்கும் அமுதென்று பெயர் (2-3 நிமிடம்)
தரம் 3 பிரிவு
மனனம் : திருக்குறள் முதல் 2 அதிகாரங்கள்
பண்ணிசை : சலம்பூவொடு தூப…..
பேச்சு : எங்கள் தமிழ் மொழி (2-3 நிமிடம்)
தரம் 4 பிரிவு
மனனம் : திருக்குறள் முதல் 3 அதிகாரங்கள்
பண்ணிசை : தேவார்ந்த தேவனைத் தேவரெல்லாம்…..
பேச்சு : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அல்லது பாரதி போற்றிய யாழ்ப்பாணத்து
சுவாமி(அருளம்பல சுவாமிகள்) (3-4 நிமிடம்)
தரம் 5 பிரிவு
மனனம் : திருக்குறள் முதல் 4 அதிகாரங்கள்
பண்ணிசை : அங்கமும் வேதமும்…..
பேச்சு : நாவலரின் தமிழ்ப் பணிகள் (3-4 நிமிடம்)
தரம் 6 பிரிவு
மனனம் : திருக்குறள் முதல் 5 அதிகாரங்கள்
பண்ணிசை : அரியாணை அந்தணர்தம்…..
பேச்சு : நல்லை நகர் தந்த ஆறுமுகநாவலர் அல்லது அறிஞர் கந்த முருகேசனார் (4-5
நிமிடம்)
தரம் 7 பிரிவு
மனனம் : திருக்குறள் முதல் 6 அதிகாரங்கள்
பண்ணிசை : இடரிலும் தளரினும் எனதுறு….. அல்லது கடிதென வந்த…..
பேச்சு : யாழ்ப்பணத்து சுவாமிகளின் உயர் ஞானம் அல்லது அறிஞர் கந்த முருகேசனார்
(4-5 நிமிடம்)
மத்திய பிரிவு (தரம் 8, 9)
மனனம் : திருக்குறள் முதல் 8 அதிகாரங்கள் (முதல் இரு அதிகாரங்களுக்க பொருள்
எழுதுதல் வேண்டும்.)
பண்ணிசை : மங்கயற் கரசி வளர்வைகோன்…(தேவாரம்)
இறவாத அன்பு வேண்டி…(திருப்புராணம்)
உம்பர் தரு தேனுமணி…(திருப்புகழ்)
பேச்சு : யாழ்ப்பணத்து சுவாமிகளின் உயர் ஞானம் அல்லது
சதாவதானி கதிரவேற்பிள்ளை (5-6 நிமிடம்)
மேற் பிரிவு (தரம் 10, 11)
கட்டுரை : பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள் அல்லது நவீன கணணி யுகம் (300-350
சொற்கள்)
பண்ணிசை : மாதர் பிறை கண்ணியானை…(தேவாரம்)
கண்களிரண்டும் அவர்கழல் கண்டு…(திருவாசகம்)
ஏகநாயகனை இமயவர்க் கரசை…(திருவிசைப்பா)
சொல்லாண்ட சுருதிப் பொருள்…(திருப்பல்லாண்டு)
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள…(திருப்புராணம்)
இசைந்தேறும் கரியுரி போர்வையும்…(திருப்புகழ்)
பேச்சு : கம்பராமாயணத்தில் தமிழர் பண்பாடு அல்லது ஜகத்தினிலோர்
உவமையில்லா யாழ்ப்பணத்து சுவாமிகள் (அருளம்பல சுவாமிகள்)
(6-7 நிமிடம்)
உயர் பிரிவு (தரம் 12, 13)
கட்டுரை : இன்று அறிவியலின் வளர்ச்சி நிலை அல்லது நவீன கணணி யுகம் (350-400
சொற்கள்)
பண்ணிசை : முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள்…(தேவாரம்)
வேண்டத்தக்க தறிவோய் நீ…(திருவாசகம்)
ஒளிவளர் விளக்கே…(திருவிசைப்பா)
குழலொலி யாலொலி…(திருப்பல்லாண்டு)
ஞானத்தின் திருவுருவே…(திருப்புராணம்)
இறவாமல் பிறவாமல்…(திருப்புகழ்)
பேச்சு : மானிடம் காட்டும் மகாபாரதம் அல்லது என்பார்வையில் அருளம்பல சுவாமிகள்
(7-8 நிமிடம்)
கதை சொல்லும் போட்டி : (தரம்1,2,3) பிரிவுகளுக்கு மட்டும் நடாத்தப்படும்
இப்போட்டியில் கதையின் சுவாரசியம், சொல்லும் பாங்கு, அபினயம் என்பவற்றுக்கு
புள்ளிகள் வழங்கப்படும். சொல்லும் கதைகள் நீதிக்கதைகளாகவோ அல்லது புனைகதைகளாகவோ
அல்லது வரலாற்றுக் கதைகளாகவோ இருப்பதோடு சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியதாகவும்
இருத்தல் வேண்டும். போட்டிக்கான நேரம் 4-5 நிமிடங்கள் வரையாகும்.
அறிவுறுத்தல்கள்
மனனப்போட்டி : பாலர் கீழ் பிரிவு – தரம் 5 வரையான பிரிவுகளுக்கு வாய்மொழி
மூலமும் அதற்கு மேல் உள்ள பிரிவுகளுக்கு எழுத்து மூலமும் போட்டிகள்
நடாத்தப்படும். எழுத்துப் போட்டியில் பங்குபற்றுபவர்கள் கேட்கப்பட்ட
குறள்களுக்கான பொருளையும் (பரிமேலழகர் உரை) எழுதுதல் வேண்டும்.
பண்ணிசைப் போட்டி : ஒவ்வொரு தரமும் கொடுக்கப்பட்ட பாடல்களை மனனம் செய்து உரிய
முறையில் இசைத்தல் வேண்டும்
பேச்சுப் போட்டி : ஒவ்வொரு பிரிவும் கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் விரும்பிய
தலைப்பினை தெரிவு செய்து பேசமுடியும்.
போட்டியாளர் ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்குபற்றமுடியும்.
போட்டிக்கான விண்ணப்பக்கட்டணமாக ஒரு போட்டிக்கு ரூபா10ம் அதற்கு மேற்பட்ட
ஒவ்வொரு போட்டிக்கும் ரூபா 5 வீதமும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்கள் யாவும் 09.05.2008 க்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும்.
வெற்றி பெறுவோருக்கான பரிசில்கள் 18.05.2008 அன்று நடைபெறும் கல்விக் கௌரவிப்பு
விழாவில் வழங்கப்படும்.
போட்டிகளில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
பேச்சுப் போட்டியில் முதலிடம் பெறுவோர் விழாவில் பேசுவதற்கு சந்தர்ப்பம் பெறுவர்.
பதிவுகளை கலைமணி சனசமூக நிலைய நூலகப்பிரிவில் மேற்கொள்ளலாம்.
மேலதிக தொடர்புகளுக்கு 021 226 3010, 077 653 1183 எனும் இலக்கங்களுடன் தொடர்பு
கொள்ளுங்கள்.
போட்டிகளின் முடிவுகள் - 2008
நிர்வாகத்தினர்
கலைமணி சனசமூக நிலையம்,
கலைமணி நூலகப்பிரிவு.
வியாபாரிமூலை.
E-mail:
info@viyaparimoolai.org
××Back
|