|
கலைமணியின் கல்விக்கெளரவிப்பு விழா
யாழ்மண்ணின் கல்விக்கடலின்
கலங்கரை விளக்காக விளங்கும் வடமராட்சி யிலே கற்றோரும்
கற்போரும் வர்த்தகரும் வித்தகரும் வதிகின்ற வளமிகு பூமியாக வியாபாரிமூலை
திகழ்கின்றது. இவ் வகையில் வியாபாரிமூலைத்தாய் வருடந்தோறும்
அதிகமான
வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் முகாமையாளர் களையும்
கலைவிற்பன்னர்களையும் பிரசவித்துக்கொண்டிருக்கிறாள். இத்தகைய
வியாபாரிமூலைத்தாயின் புதல்வர்களை கல்வியில் மென்மேலும் வளரச்செய்வதற்கு
அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டிய கடமை வியாபாரிமூலைத் தாய்க்கு ஏற்பட்டது.
இதனால் அவர்களுக்கு உற்சாகம் அளித்து கௌரவிக்கும் முகமாக கலைமணி
அங்கத்தவர் களினதும் மற்றும் ஊர்ப் பெருமக்களினதும் எண்ணத்தில் உதித்ததே
இக் கல்விக் கௌரவிப்பு விழா ஆகும். இக்கல்விக் கௌரவிப்பு விழாவானது
ஒவ்வொரு வருடமும் புதுவருட தினத்தன்று நடாத்தப்படுவதென்று முடிவு
செய்யப்பட்டது. இதனடிப்படையில முதலாவது கல்விக்கௌரவிப்பு விழா 2003
ஆம் ஆண்டு சித்திரைப் புதுவருட தினத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில் தற்போது ஒவ்வொரு வருடமும் புதுவருட தினத்தன்று வெகு
சிறப்பாக கலைமணி சமூகத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. இந் நிகழ்வின்
போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வியாபாரிமூலைத் தாயின்
புதல்வர்களும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த
புதல்வர்களும் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து
உயர்கல்விக்கு தகுதிபெற்ற வியாபாரிமூலைத்தாயின் புதல்வர்களும்
விழாநாயகர்களாக கௌரவிக்கப்படுகின்றனர். இதன்போது இவர்களுக்கு கலைமணி
சமூகத்தினரால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படுகின்றது.
இந்நிகழவின் போது கவிதை, கட்டுரை, பேச்சு, விளையாட்டு (துடுப்பாட்டம்,
உதைபந்து, கரப்பந்து ) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு
பரிசில்கள் வழங்கப்படுகின்றது. இவ்வாறு நாம் இதனை செய்வதனுடாக
வியாபாரிமூலைத்தாயின் புதல்வர்கள் கல்வி , விளை யாட்டு மற்றும் சகல
துறைகளிலும் வித்தகர்களாக திகழ்கின்றனர்.
இவ்வாறு இந்நிகழ்வை சிறப்புற நிகழ்த்துவதற்கு எமது ஊரில்
வாழ்கின்ற மக்கள் மட்டுமன்றி எமது ஊரைச்சார்ந்த புலம்பெயர்ந்து வாழும்
உறவுகளும் எமக்கு நிதியுதவியையும் வேறு பல்வேறு உதவிகளையும் செய்து
வருகின்றனர். அவர்களுக்கு வியாபாரிமூலைத் தாய் இச்சந்தர்ப்பத்தில் நன்றி
சொல்ல கடமைப்பட்டுள்ளதுடன் இந் நிகழ்விற்கு மென் மேலும் உதவி புரியுமாறு
தன்புதல்வர்களை உரிமையுடன் வேண்டிநிற்கின்றாள்.
|